Saturday, September 18, 2010

பதிவுலக நாட்டாமைகள்

இரண்டு வாரத்துக்கு முதல் தற்செயலாக நான் அறிந்து கொண்ட ஒரு விடயம்..எழுந்தமானமாக வலைபூக்களை 
வாசித்துகொண்டிருக்கும்  போது தற்செயலாக கண்ணில் பட்டது அந்த பதிவு..அந்த தளத்தில் உள்ள பதிவுகள் சிலதை படிக்கும் போதே தெரிந்துகொண்டேன் அது ஒரு கம்யுனிசம் எனும் விஷத்தை கக்கும் ஒரு தளம் என்று...சரி இப்போது பிரச்னைக்கு வருவோம்...மூன்று பதிவர்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே பிரச்சனை ஆகும்..அதாவது தென்கிழக்காசிய நாடொன்றில் இருக்கும் பெண் பதிவர் ஒருவரை பற்றி இன்னொரு தென் கிழக்காசிய நாட்டில் இருக்கும் பதிவர் ஒருவரும்,வட அமெரிக்காவில் இருக்கும் பதிவர் ஒருவரும் தவறாக  எழுதிவிட்டார்களாம். அதுவும் புனை கதை என்ற போர்வையில் அந்த பெண்ணை பற்றி தவறாக சித்தரித்து விட்டார்களாம்..

புனை கதையில் ஒரு பெண்ணை தவறாக சித்தரிப்பது தவறுதான்..இதற்கு அந்த பதிவர் என்ன செய்திருக்க வேண்டும்?
தவறாக எழுதியவரின் தளத்தை ஹோஸ்ட் செய்யும் நிறுவனத்திடம் 
முறையாக ஒரு புகார் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது போலீசில் சைபர் கிரைம் துறைக்கு 
புகார் கொடுத்திருக்க வேண்டும்..அதை விட்டு கம்யுனிசம் என்ற
பெயரில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ஒருகும்பலிடம் முறையிட்டது ஏன்?
ஒரு குழுவாக சேர்ந்து ஒருகம்யுனிச தளத்தைஇயக்கம் 
வர்களின் அலும்பு சொல்லி மாளாது..எதிலும் குற்றம் காணுவது தான் இவர்களின் தொழில்..மேலும் முதலாளித்துவத்தை எதிர்க்கிறோம் என்று சிறந்த ஜனநாயக தலைவர்களை கூட இவர்கள் இழிவாக சித்தரிக்கிறார்கள்..மேலும் தங்களுக்கு பிடிக்காத பதிவர்கள்,பிரபலங்கள் யாவரையும் படு கேவலமாக எழுதுகிறார்கள்..

கம்யுனிசத்துக்கு ஒத்துவராரத ஒரே ஒரு காரணத்தினால் எல்லா மதத்தை பற்றியும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளி மதநம்பிக்கைகளை கேவலபடுத்துகிறார்கள். ஒரே கட்சி ஆட்சிமுறை என்ற சர்வாதிகாரத்தை பின்பற்றும் இவர்கள் ஏனையோரின் விடுதலையை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமாகும்..பதிவுலக நண்பர்களே..உங்களுக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அதை நீங்களே தீர்த்துகொள்ளுங்கள் அல்லது ஜனநாயக வழியில் சட்டத்தின் உதவியை நாடுங்கள்..தயவு செய்து இந்த மாதிரி பதிவுலக கட்ட பஞ்சாயத்து தளங்களை நாடவேண்டாம்..இவர்கள் அடுத்தவர் பிரச்சனையை மூலதனமாக்கி அதில் தங்களை இலவசமாக விளம்பரம் செய்து கொள்பவர்கள்...ஜனநாயகம் என்றும் தலை காக்கும்...


Thursday, September 16, 2010

கம்யுனிசத்தின் கறுப்பு பக்கங்கள்....

வாய் கிழிய பொதுவுடைமை பேசும்..

ஆனால் கட்சி மட்டும் தனிஉடமை...

தனி மனித சுதந்திரத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு
சமத்துவம் பேசி என்ன பயன்...

மனித உரிமையை மிதித்து விட்டு
தொழிலாளர் உரிமை பேசி என்ன பயன்...

ஜால்ரா அடித்தால் தோழர்..
.
மாற்றுகருத்து இருந்தால் எதிரி..
.
முதலாளித்துவத்தை சாகும்வரை ஏதிர்ப்போம்...

ஆனால் சர்வாதிகாரத்தை தினம் தினம் வளர்ப்போம்..

கம்யுனிச கிழட்டு சிங்கம் காஸ்ட்ரோவே சொல்லி விட்டார்
இனி கம்யுனிசம் வேலைக்கு ஆகாதென்று...

என்னதான் கூறினாலும் இத்துப்போன சித்தாந்தர்த்தை
வேதமாக கொண்டாடும் நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்பது உலகறிந்த விடயம்... 

கம்யுனிச நண்பா...உனக்கொரு கதை கூறுகிறேன் கேள்...

சீன 65 மில்லியன்...
சோவிஎத் ஜூனியன் 20 மில்லியன்...
கம்போடியா 2 மில்லியன்...
வடகொரியா 2 மில்லியன்...
ஆபிரிக்கா 1.7 மில்லியன்...
வியட்நாம் 1 மில்லியன்...
கிழக்கு ஐரோப்பா 1 மில்லியன்...

என்ன புரியவில்லையா...

எல்லாம் கொள்கைக்காக கொன்றோளிக்கபட்ட அப்பாவி பொதுமக்கள்...

கூட்டி கழித்துபார்...உலக போர்களில் இறந்தவர்களை விட அதிகம் இந்த தொகை...

முதலாளித்துவம் சுட்டால்  கொலை...கம்யுனிசம் சுட்டால் கொள்கையா...

சர்வதிகாரம் மூலம்  கொள்கைகளை அடுத்தவன் வாயில் திணிக்கும்
கம்யுனிசத்தை விட கொடிய அடக்கு முறை வேறு எங்கு இருக்க முடியும்...

கம்யுனிச நண்பர்களே..விழித்தெழுங்கள்....

உங்களின் போராட்டங்களுக்கு ஜனநாயகத்தில் சிறந்த பதில் உண்டு...

கம்யுனிசம் எனும் இரத்தவெறியை தூக்கிஎறிந்து  விட்டு
இன்றே ஜனநாயக நீரோட்டத்தில் இணையுங்கள்...

வாழ்க ஜனநாயகம்...




Tuesday, September 14, 2010

ஜனநாயகம்

ஜனநாயகம் என்றால் என்ன?
 
மக்களாட்சி அல்லது ஜனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர்.

உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
மக்களாட்சியை ஆங்கிலத்தில் டெமாக்ரசி (Democracy) என்பர். டெமாக்ரசி என்ற சொல் டெமோஸ் (Demos) கிராட்டோஸ் (Kratos) என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. டெமோஸ் என்பதற்கு மக்கள்  என்றும் கிராட்டோஸ் என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள்.
"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேடோ  குறிப்பிடுகிறார்.அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார். "மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார்.

வாசகர்களே உங்கள் கருத்து என்ன?உலகின் சிறந்த ஆட்சி முறை ஜனநாயகமா?அல்லது கம்யுனிசமா?உங்களின் ஆரோக்கியமான  கருத்துக்களை வரவேற்கிறேன்...